Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் மோகன்லால்?...

vinoth
வெள்ளி, 25 ஜூலை 2025 (15:16 IST)
இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இதுவரை இயக்கி இருப்பது ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே.  பின்னர் மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் ‘நினைவோ ஒரு பறவை’ என்ற திரைப்படம்தான். ஆனாலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் திரை உலகில் உள்ளவர்களே அவருக்கு மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளனர். மொத்தத்தில் அறிவுஜீவிகளுக்கான இயக்குனராக அவர் இருந்து வருகிறார்.

இவர் படங்கள் பெரியளவில் விவாதிக்கப்பட்டாலும் வணிகரீதியாக வெற்றி பெறுவதில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதை குமாரராஜாவே ஒத்துக்கொண்டுள்ளார். இதனால்தான் அவர் ஒவ்வொரு படத்துக்கும் இடையே அதிக இடைவெளி எடுத்துக் கொள்கிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய மூன்றாவது படமாக மணிகண்டனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை குமாரராஜாவுடன் இணைந்து மணிகண்டனும் எழுதுகிறார். இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் உடையில் ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் புகைபடத் தொகுப்பு!

வித்தியாசமான உடையில் க்யூட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் மோகன்லால்?...

கூலி படத்தில் மட்டும்தான் எனக்கு அந்த அழுத்தம் இல்லை.. பிளாஷ்பேக் பரிசோதனை.. மனம் திறந்த லோகேஷ்!

திருடன்தான்.. ஆனால் ராபின்ஹுட் வகையறா! ஆக்‌ஷன் மசாலா கியாரண்டி! - ஹரிஹர வீரமல்லு திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments