Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் தமிழ் இயக்குனர்- யார் தெரியுமா?

லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் தமிழ் இயக்குனர்- யார் தெரியுமா?
, திங்கள், 23 நவம்பர் 2020 (16:20 IST)
சிரஞ்சீவி நடிக்க உள்ள லூசிபர் ரீமேக்கை இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளார்.

கடந்த வருடம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில்வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.

முதலில் பிரபாஸை வைத்து சாஹோ என்ற பிரமாண்ட படத்தை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. அதற்காக தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப காட்சிகளை மாற்றும் பணிகளில் சுஜித் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவரின் திரைக்கதையில் சிரஞ்சீவிக்கு திருப்தி இல்லை என்பதால் அவரை தூக்கிவிட்டு வேறு இயக்குனரைப் படக்குழு தேடி வந்தது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தை தமிழ் இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் அந்தாதூன் தமிழ் ரீமேக் படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்மீக சேவை செய்யப்போறேன்னு போன நடிகை திருமணம் – அதிர்ச்சி முடிவு!