நடிகர் அரவிந்த்சுவாமி மீண்டும் வில்லனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தை அடுத்து அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஆச்சார்யா. பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். சிரஞ்சீவியின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆச்சார்யா படத்தின் மோஷன் போஸ்டரைப் படக்குழு வெளியிட வைரல் ஹிட்டாகியது. இந்நிலையில் கொரோனா காரணமாக தாமதமான படப்பிடிப்பு நவம்பர் 9 ஆம் தேதி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் வில்லன் யார் என்பது கடைசி வரை முடிவாகாமல் இருந்த நிலையில் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அரவிந்த்சாமி அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை தயாரிக்கும் ராம் சரண் தேஜாவே நேரடியாக அரவிந்த்சுவாமியிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.