Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்துமீறி முத்தம் கொடுக்க வந்த ரசிகர் – ஒரே பார்வையில் ஆஃப் செய்த சூப்பர் ஸ்டார்!

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (15:00 IST)
மலையாள சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன் லாலிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறி நடந்துகொனட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே சினிமா பிரபலங்கள் வெளியில் சென்றால் அவர்களுக்கான பிரைவசியை நம் நாட்டு ரசிகர்கள் கொடுப்பதில்லை. எங்கு சென்றாலும் செல்பி எடுப்பது, கட்டிபிடித்து போட்டோ எடுப்பது என்ற அன்புத்தொல்லை கொடுப்பார்கள்.

அதிலும் ஒரு சிலர் எல்லை மீறி முத்தம் கொடுப்பது வரை செல்வார்கள். நடிகர்களும் நாகரீகம் கருதி கோபம் வந்தாலும் சிரித்துக் கொண்டே செல்வார்கள். ஆனால் என்னதான் நடிகர்களாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே. சில நேரம் கோபம் வரதானே செய்யும்.

அதுபோல ஒரு சம்பவம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள நடிகர் மோகன்லால் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல அங்கு வந்த ஒரு ரசிகர் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அருகில் செல்கிறார். ஆனால் அவரை தன் ஒரே ஒரு கோபப் பார்வையில் மோகன் லால் முறைக்க ரசிகர் விலகி செல்கிறார். இந்த வீடியோ எங்கே எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments