Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்.ஜி.ஆர்-சிவாஜி நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி' நாயகி காலமானார்

எம்.ஜி.ஆர்-சிவாஜி நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி' நாயகி காலமானார்
, வியாழன், 7 மார்ச் 2019 (08:57 IST)
தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக இருந்த மக்கள் திலகம் எம்ஜிஅர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் நடித்த ஒரே படம் 'கூண்டுக்கிளி'. இந்த படம் வெளியானபோது இருதரப்பு ரசிகர்களிடையே திரையரங்கில் மோதல் ஏற்பட்டதால் அதன்பின்னர் இருவரும் இணைந்து நடிக்கவில்லை
 
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நாயகிகளில் ஒருவரான குசலகுமாரி இன்று காலமானார். தமிழில் இவர் 'பராசக்தி', 'கொஞ்சும் சலங்கை', 'ஹரிச்சந்திரா' உள்பட பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து தனது நடிப்புத்திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
webdunia
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பிரேம் நசீர், நாகேஸ்வரராவ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் குசேலகுமாரி என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த 2015ஆம் ஆண்டு வறுமையில் வாடி வாடிய நடிகை குசலகுமாரிக்கு தமிழக அரசின் சார்பில் மாதம் ரூ. 5,000 நிதியுதவிக்கான உத்தரவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏப்ரலில் ரிலீஸ் ஆகிறது தனுஷ் படம்; தயாரிப்பாளர் தகவல்