Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூரில் குதிரை வண்டி எல்கை பந்தயப்போட்டி

Advertiesment
கரூரில் குதிரை வண்டி எல்கை பந்தயப்போட்டி
, வெள்ளி, 18 ஜனவரி 2019 (17:40 IST)
கரூரில் குதிரை வண்டி எல்கை பந்தயப்போட்டி – பெரியகுதிரை, நடுக்குதிரை, புதிய குதிரை என்று மூன்றுவகையான குதிரைப்போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது – தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.




கரூரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்த தினத்தினையொட்டி, மாபெரும் குதிரை வண்டி எல்கை பந்தயப்போட்டி நடைபெற்றது. கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்த போட்டி கரூர் அடுத்த ஆத்தூர் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நடைபெற்ற இந்த போட்டியில் பெரியகுதிரை 10 மைல்  தூரம் சென்றுவரவும், நடுக்குதிரை அளவு 44 இஞ்சுக்கான குதிரை சென்று வர 8 மைல் தூரமும், புதிய குதிரை சென்று வர 6 மைல் தூரமும் சென்று வந்தது. மேலும், தமிழகத்தில் எங்கும் இல்லாதது போல், புதிய குதிரை வண்டிகள் 40 இருந்ததினால் இரண்டு முறை 20 குதிரை ஒரு முறையும், மற்றொரு 20 குதிரை இன்னொரு முறையும் போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டு அவர்களுக்கும் தனித்தனியாக பரிசுகள் ஒவ்வொரு செட்டிற்கும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசுகள் கொடுக்கப்பட்டது. ஆக புதியக்குதிரைகளுக்கு மட்டும் இரண்டு முதல் பரிசுகள், இரண்டாம் பரிசுகள், மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் நான்கு இடம் பிடித்த குதிரை வீரர்களுக்கு பரிசுகள் வழங்கியும், பரிசுத்தொகைகளை வழங்கி கெளரவித்தார். மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரூர் மாவட்டம் மட்டுமில்லாது, கோவை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குதிரை வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.


சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த தாத்தா பரபரப்பு வாக்குமூலம்