Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளியானது மேதகு பார்ட் 2 டிரைலர்!

வெளியானது மேதகு பார்ட் 2 டிரைலர்!
, சனி, 27 நவம்பர் 2021 (09:56 IST)
விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் மேதகு பட வரிசையில் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் பிரபாகரனின் இளமைக்கால வாழ்வை சொல்லும் படமாக வெளியாகியுள்ளது மேதகு. இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது. முதல் பாகத்தில் பிரபாகரன் எப்படி ஆயுதப் பாதையை தேர்ந்தெடுத்தார் என்பது வரை மட்டுமே சொல்லப்பட்டு இருந்தது. அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வரும் எனப் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று பிரபாகரனின் 67 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மேதகு 2 படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. முதல் படத்தில் நடித்தவர்கள் இல்லாமல் வேறு நடிகர்கள் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநாடு படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்!