இரண்டு சங்கங்களில் முக்கிய பதவியில் உள்ள உயர நடிகர் தற்போது புதிதாக நடிக்கும் படித்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறாராம். அவர் ஒரு வேடத்தில் நடித்தாலே தாங்காது, இதில் மூன்று வேறா என கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
‘தமிழ் சினிமா எனக்கு அம்மா மாதிரி. அதுக்கு ஒரு பிரச்னை வந்தா நான் சும்மா இருக்க மாட்டேன்’ என்று டயலாக் பேசியே இரண்டு சங்கங்களின் முக்கியமான பதவிகளைக் கைப்பற்றியவர் உயர நடிகர். ஆனால், பதவிக்கு வந்து தற்போதுவரை அவர் என்ன கிழித்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால், அரசியல் ஆசையில்தான் அவர் இப்படியெல்லாம் செய்கிறார் என்கிறார்கள்.
அதற்கு வலுசேர்ப்பது போல, நடிகராக இருந்து தமிழ்நாட்டின் முதல்வரான மூன்றெழுத்து நடிகர் நடித்து ஹிட்டான படத்தின் தலைப்பை, தன்னுடைய பெயருக்கும் சூட்டியிருக்கிறார் என்கிறார்கள். அவர் ஒரு வேடத்தில் நடித்தாலே தாங்காது… இதில் மூன்று வேறா என்று கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள். இந்த லட்சணத்தில் அவருக்கு ரெண்டு ஹீரோயின்களாம்.