பிரபல பாடகரின் மகன் பாடுவதை மட்டும் செய்யாமல் தற்போது ஹீரோவாக நடிக்கிறார். தற்போது அவர் கூட நடிக்க த்ரிஷா மட்டும் போதும் என்கிறாராம்.
கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகரின் மகன் இவர். இவரும் சினிமாவில் பாடுபவர்தான். ஆனால், திரையில் தோன்றுபவருக்கும், திரைக்குப் பின்னால் பணியாற்றுபவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? திரையில் தோன்றுபவர்களுக்கு கிடைக்கும் புகழையும், மரியாதையையும் பார்த்து, தானும் நடிக்க வேண்டுமென நினைத்தார்.
‘ஒல்லி’ நடிகர் படத்தில் போலீஸாக நடித்தவர், தமிழை மென்று துப்பினார். தற்போது, தேனி மாவட்டத்துக் கதையில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு, த்ரிஷா மற்றும் நயன்தாரா கூட நடிக்க ஆசையாம். உலக அழகி ஐஸ்வர்யா நடிப்பு பிடிக்குமென்றாலும், அவர் லெவலுக்கு த்ரிஷாவே போதும் என்கிறாராம். ஆமாம்… த்ரிஷா எந்த லெவலில் இருக்கிறார்..?