Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மரண மொக்கை வாங்கிய மெகா பட்ஜெட் படங்கள் : உண்மை நிலவரம் என்ன...?

Advertiesment
மரண மொக்கை வாங்கிய மெகா பட்ஜெட்  படங்கள்  : உண்மை நிலவரம் என்ன...?
, வியாழன், 27 டிசம்பர் 2018 (14:10 IST)
இன்றைய காலத்தில் இரண்டு வாரங்கள் படங்கள் ஓடினாலே அது சூப்பர் ஹிட் என்று சொல்லும் நிலை வந்துவிட்டது. காரணம் வருடத்தில் பலநூறு படங்கள் ரிலீஸ் ஆவதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல், அதில்லாமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே மக்கள் வெற்றியடைய செய்வார்கள் என்ற நிலை ஆகியவையே படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.
இந்நிலையில் பாலிவுட்டில் கால்நூற்றாண்டுகளாக ஜொலித்து பலவெற்றிகள் கண்ட ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் ஆகிய மூன்று பேரின் படங்களும் இந்தாண்டு பெரிய ப்ளாப்களை சந்தித்துள்ளன.
 
ஆம்! ஷாருக்கானின் ஜீரோ படம் பயங்கர எதிர்ப்பார்புகளுடன் வெளியாகி கடும்  தோல்வியை தழுவியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அமிர் கான் , அமிதாப் நடிப்பில் வெளியான தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் படுதொல்வியை தழுவியது. நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் அமீர் கானும் இந்த ஃபிளாப் கொடுத்ததால்தான் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
அதேபோல இந்த ஆண்டு அதிக சம்பாதித்த இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த சல்மான் கானின் நடிப்பில் வெளியான ரேஸ் 3 படமும் படுதோல்வி அடைந்தது.
 
இதிலிருந்து பெரிய நடிகர்களாக இருந்தாலும் கூட கதை நன்றாக இருந்தால்தான் படங்கள் ஓடும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனமாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்யாவில் மாஸ் காட்டும் 'விஸ்வாசம்' ! சாதித்த தல!