Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிருக்கு போராடி இறந்த சுஜித்: கண்கலங்கி வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

Advertiesment
உயிருக்கு போராடி இறந்த சுஜித்: கண்கலங்கி வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!
, செவ்வாய், 29 அக்டோபர் 2019 (11:04 IST)
கடந்த 25ஆம் தேதி மாலை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுவன் சுஜித் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைபரபலங்களும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


 
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில், சுஜித் நீங்க பிறந்தது ஒரு காரணத்திற்காக,  உயிருக்கு போராடி போர் வீரனை போல் இறந்திருக்கிறீர். உங்களை ஒரு தியாக செம்மலாக தான் நான் பார்க்கிறேன். ஏனென்றால் இனிமேல் இது போன்று குழந்தைகள் இறக்காமல் இருப்பதற்கு உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறீர். என கண்ணீருடன் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். 
 
மேலும்,  இனிமேல் இன்னொரு குழந்தைக்கு இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வது தமிழக அரசின் பொறுப்பு' என மீரா மிதுன் கூறியுள்ளார். மீராவின் இந்த பதிவிற்கு பலரும் சுஜித்தின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் படத்தில் மீண்டும் இணையும் தேசிய விருது கலைஞர்