Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் வீட்டில் எனக்கும் முகினுக்கும் நடந்ததை சொன்னால்…!? – ஆவேசமாக பேசிய மீரா! – வீடியோ!

Advertiesment
பிக்பாஸ் வீட்டில் எனக்கும் முகினுக்கும் நடந்ததை சொன்னால்…!? – ஆவேசமாக பேசிய மீரா! – வீடியோ!
, செவ்வாய், 15 அக்டோபர் 2019 (14:09 IST)
பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுன் – முகின் இடையே காதல் குறித்து பல்வேறு ஊகங்களும், செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து விளக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் சக போட்டியாளர் முகின் வெற்றிபெற கூடாது என்பதற்காக அவர் போட்டோவை தன்னுடன் சேர்த்து எடிட் செய்து வெளியிடுமாறு யாரிடமோ பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து தற்போது ட்விட்டரில் வீடியோ வெளியிட்ட மீரா மிதுன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் “முகின் குறித்து நான் பேசியதாக வெளியான வீடியோ போலியானது. என் முன்னாள் மேனேஜர் எனது போனை திருடி அதிலுள்ள தகவல்களை பலருக்கும் ஷேர் செய்துள்ளார். அவர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளேன்.

மேலும் நான் மிஸ் இந்தியா விருது பெற்று புகழ் பெற்றவள். முகினை தமிழ்நாட்டில் யாருக்குமே தெரியாது. அப்படியிருக்க நான் அவர் விருது வாங்குவதை தடுக்க என்ன அவசியம் வந்தது. அப்படி நான் நினைத்திருந்தால் பிக்பாஸ் வீட்டுல் முகினுக்கும் எனக்கும் இடையே நடந்த பல விஷயங்களை சொல்லியிருக்க முடியும்” என கூறியுள்ளார்.

மேலும் அவர் “பிக்பாஸ் வீட்டில் இருந்த பலரும் என்னை காதலித்தார்கள். ஆனால் அவர்களுக்கு அதை தைரியமாக வெளியே சொல்ல தைரியம் இல்லை” என்று கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“பிகில் என்னுடைய கதை”: வழக்கம் போல் ஒரு வழக்கு..