Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊளையிடுவதை தட்டி கொடுக்குறீங்க...வி ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியால் கடுப்பான கஸ்தூரி!

Advertiesment
ஊளையிடுவதை தட்டி கொடுக்குறீங்க...வி ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியால் கடுப்பான கஸ்தூரி!
, திங்கள், 14 அக்டோபர் 2019 (15:05 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி , தர்ஷன் , முகின், கவின் போன்றோர் நண்பர்களாக இருந்து வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து அரட்டையடிப்பதும் , காண பாடல் பாடுவதும் , கிண்டலடிப்பதுமாக இருந்து வந்தனர். அப்போது பிக்பாஸ் வீட்டில் அவர்கள் பாடிய "வி ஆர் தி பாய்ஸ் ஊ ஊ ஊ "என்ற பாடல் படுஃபேமஸ் ஆனது. 


 
இந்நிலையில் தற்போது அதை வைத்து வி ஆர் தி பாய்ஸ் என்ற பெயரில் விஜய் டிவி பாய்ஸ் அணியை மட்டும் வர வைத்து கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இதற்கு முன் ஒளிபரப்பான சீசன்களில்  நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைத்து போட்டியாளர்களையும் வர வைத்து தான் ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டம் என ரகளையாக இருக்கும் தற்போது அப்படியில்லை. 

webdunia

 
இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை கண்டு கடுப்பான கஸ்தூரி ட்விட்டரில், இது ரொம்ப கேவலமாக இருக்கிறது. விஜய் தொலைக்காட்சி தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை புரமோட் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால், அதுவும் ஆண்களின் விஷமத்தனத்தை புரமோட் செய்வது போலதான் இருந்தது. நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? இளைஞர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும் என்று கூறி  கமலையும் டேக் செய்துள்ளார் கஸ்தூரி.

webdunia
கஸ்தூரின் இந்த பதிவிற்கு ஆதரவு அளித்துள்ள மதுமிதா, ஆணென்ன? பெண்ணென்ன? எல்லாம் ஓரினம் தான். இதுவும் பாடல் தான். விஷத்தை தேன் கலந்து சாப்பிட வைக்கிறீர்கள்... சுவையாக இருப்பதால் நாமும் சாப்பிடுகிறோம்..வி ஆர் தி பாய்ஸ் ஒரு தவறான விஷயம் என்று டேக் போட்டுள்ளார். மேலும் விஜய் டிவி ஆண்களின் ஆதிக்கத்தை ஊளையிட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரியோவுடன் கைகோர்த்த நடிகை ரம்யா நம்பீசன் - போஸ்டருடன் புதுப்பட அப்டேட்!