தனுஷுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி… எந்த படத்தில் தெரியுமா?

vinoth
வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (09:26 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற்று 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த வெற்றி ராஜ்குமார் பெரியசாமியைக் கவனிக்க வைக்கும் இயக்குனராக்கியுள்ளது.

இதையடுத்து அவர் தனுஷ் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மதுரை அன்பு செல்வன் தயாரிக்கவுள்ளார். படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கும் எனவும், மற்ற நடிகர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ‘கோட்’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களில் நடித்த மீனாட்சி சௌத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments