Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மணமக்களுக்கு பெட்ரோல் பரிசளித்த மயில்சாமி: காரணம் இதுதான்!

Advertiesment
மணமக்களுக்கு பெட்ரோல் பரிசளித்த மயில்சாமி: காரணம் இதுதான்!
, திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (17:20 IST)
புதுமண தம்பதிகளுக்கு பெட்ரோலை மயில்சாமி பரிசளித்து உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகர் மயில்சாமி எதையும் வித்தியாசமாக செய்வார் என்பதும் மனதில் பட்டதை ஓபனாக பேசுவார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று சென்னையில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி மணமக்களுக்கு பெட்ரோல் கேன்களை பரிசாக அளித்தார் 
 
பெட்ரோல் மற்றும் டீசலின் உயர்வு குறித்து மத்திய அரசுக்கு கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே பெட்ரோல் பரிசளிப்பதாக கூறினார். தமிழக அரசு பெட்ரோலுக்கான வரியை மூன்று ரூபாய் குறைத்ததற்கு தான் பாராட்டுவதாகவும் அதேபோல் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார் 
 
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து கண்டு கொள்ளாமல் இருப்பதை சுட்டிக் காட்டுவதற்காகவும் மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக அளித்தான் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐந்து மொழிகளில் வெளியாகும் அண்ணாச்சி படம்!