Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"மட்கா" திரைப்படம், நவம்பர் 14-ஆம் தேதி வெளியாகிறது!!

J.Durai

, புதன், 2 அக்டோபர் 2024 (09:09 IST)
மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிக்கும் மாஸ் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படமான "மட்கா" தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. தற்போது, படக்​​குழு வருண் தேஜ் மற்றும் போராளிகள் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான மற்றும் தீவிரமான அதிரடி ஆக்சன் காட்சிகளைப் படமாக்கி வருகிறது. கருணா குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தினை, வைரா என்டர்டெயின் மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின்  சார்பில்,டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா மற்றும் ரஜனி தல்லூரி ஆகியோர் தயாரிக்கின்றனர். வருண் தேஜ் திரை வரலாற்றில் மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் மட்கா ஆகும்.
 
படத்தின் அனைத்து பணிகளும்  முடிவடையும் தறுவாயில் உள்ளது, இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியைத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். கார்த்திகை பூர்ணிமாவுக்கு முன்னதாக நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும். இது ஒரு நீண்ட வார இறுதியில் ரசிகர்கள் கொண்டாட ஏதுவாக இருக்கும்.
 
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்திய படக்குழு தற்போது செகண்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். வருண் தேஜ் இந்த போஸ்டேரில் ரெட்ரோ அவதாரத்தில் அசத்தலான உடையில், வாயில் சிகரெட்டுடன் படிக்கட்டுகளில் நடந்துகொண்டு, நேர்த்தியுடன் காட்சியளிக்கிறார்.  வருண் தேஜ் அவரது கதாபாத்திரத்தின் பரிணாமத்தை அழகாகப் பிரதிநிதித்துவப்படுத்தும், இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் அசத்துகிறார். 
 
1958 மற்றும் 1982க்கு இடையில் நடக்கும் கதை என்பதால், 50 களில் இருந்து 80 கள் வரையிலான சூழலை மீண்டும் கச்சிதமாக உருவாக்கி இயக்குநர் கருணா குமார் வெற்றி பெற்றிருக்கிறார். 24 வருட கதை என்பதால் வருண் தேஜ் இப்படத்தில் நான்கு வித்தியாசமான கெட்-அப்களில் தோன்றுகிறார். வருண் தேஜின் மாறுபட்ட தோற்றம் ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒர்க்கிங் ஸ்டில்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது வெளியீட்டுத் தேதியை அறிவித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். 
 
வருண் தேஜ் ஜோடியாக நோரா ஃபதேஹி மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் நவீன் சந்திரா மற்றும் கன்னட கிஷோர் ஆகியோரும்  முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.  
 
மட்கா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் திலகம் பிறந்த நாள் விழாவில் -நடிகர் நடிகைகள் திரண்டு வந்து மரியாதை!