Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15 கோடியில் வைஸாக் நகரை உருவாக்கிய மட்கா படக்குழு!!

Advertiesment
15 கோடியில் வைஸாக் நகரை உருவாக்கிய மட்கா படக்குழு!!

J.Durai

, வியாழன், 27 ஜூன் 2024 (16:17 IST)
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படமான  “மட்கா” படத்திற்காக, 15 கோடி செலவில் பழமையான வைஸாக் நகரம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது
 
நடிகர் வருண் தேஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் 'மட்கா'. தற்போது இப்படத்தின் மூன்றாவது ஷெட்யூல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு விரிவான 35 நாள் ஷூட்டிங் ஷெட்யூலாகும், இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக மட்டும் 15 கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமோஜி ஃபிலிம் சிட்டியில் (RFC) விண்டேஜ் வைஸாக் நகர அமைப்பை,  தயாரிப்புக் குழு உருவாக்கியுள்ளது. இது பிரம்மாண்டத்துடன் கூடிய பழைய வைஸாக் நகருக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் புதுமையான அனுபவமாக இருக்கும். 
 
'மட்கா' மிகப்பெரும் பட்ஜெட்டில் பான்-இந்திய படமாக உருவாக்கப்படுகிறது. விண்டேஜ் லுக்கை கொண்டு வர, பிரம்மாண்ட செட் அமைப்பது, ரசிகர்களுக்கு கண்கவர் அனுபவத்தை வழங்குவதற்கான படக்குழுவினரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. 
 
கடந்த காலத்திலிருந்த வைஸாக்கின் வசீகரத்தையும் அதன் அமைப்பையும்  பிரதிபலிக்கும் வகையில், மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட செட், படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும். மேக்கிங் வீடியோ படத்தின் முன் தயாரிப்பு மற்றும் பிரம்மாண்டமான படப்பிடிப்பு என படத்தின் மீது ஆர்வத்தை கூட்டுகிறது. 
 
பன்முக நடிப்புக்கு பெயர் பெற்ற வருண் தேஜ், 'மட்கா' படத்தில் வித்தியாசமான மற்றொரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க உள்ளார். அவரது பாத்திரம் படத்தில் முக்கியமானது, மேலும் அவரது கதாப்பாத்திரத்தின் தாக்கம், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தேசத்தையே உலுக்கிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து பிரம்மாண்டமான திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குநர் கருணா குமார். மீனாட்சி சவுத்ரி நாயகியாகவும், பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
'மட்கா' படத்தின் தனித்துவமான கதை, அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட செட் ஆகியவை பார்வையாளர்களை ஈர்க்கும் என்று
படக்குழுவினர் நம்புகிறார்கள். அவர்களின் நோக்கம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவின் வரலாற்றில் தனித்து நிற்கும் ஒரு மறக்கமுடியாத சினிமா அனுபவத்தை உருவாக்குவதாகும்.
 
'மட்கா' வருண் தேஜின் கேரியரில் ஒரு மைல்கல் படமாக இருக்கும், மட்கா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று மாலை அசத்தலான ‘குட் பேட் அக்லி’ அப்டேட்.. அஜித் மேனேஜர் அறிவிப்பு..!