தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வெற்றிப்படமாக்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர் என்பதும் அதேபோல் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை சூப்பராக படக் குழுவினர் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ஒரு திரைப்படம் வெளியாகி குறைந்தது ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் கழித்துதான் ஓடிடியில் வரும் என்ற நிலையில் ஜனவரி 26ம் தேதியே அமேசானில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் அமேசான் பிரைமில் மாஸ்டர் படத்தை விற்றது உண்மைதான் என்றும் ஆனால் 45 நாட்கள் கழித்துதான் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வரும் என்றும் கூறினார்
ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி ஜனவரி 26 ஆம் தேதி அதாவது ரிலீஸான 13 நாட்களிலேயே மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வரும் என கூறப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் இதனை மறுத்துள்ளனர். மாஸ்டர் படம் ஜனவரி 26ஆம் தேதி வெளிவரும் என்பது முழுக்க முழுக்க வதந்தியே என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.