அன்பு குரூப்பை அடுத்து பிக்பாஸ் வீட்டிற்கு வரும் சனம்ஷெட்டி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஞாயிறு உடன் முடிவடைய உள்ள நிலையில் ஏற்கனவே எவிக்ட்டான போட்டியாளர்கள் இன்று முதல் பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்து கொண்டிருக்கின்றனர்
இன்றைய முதல் இரண்டு புரமோ வீடியோவில் அர்ச்சனா நிஷா ரமேஷ் மற்றும் ரேகா ஆகிய நால்வரும் வந்ததைப் பார்த்தோம். அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அடுத்த கட்டமாக சனம்ஷெட்டியும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது எனக்கு இன்னும் அழைப்பு வரவில்லை என்றும் அழைப்பு வந்தால் செல்வேன் என்றும் கூறியுள்ளார். அதேபோல ஆஜித், ஷிவானி ஆகியோர்களும் வியாழன் அல்லது வெள்ளி அன்று பிக்பாஸ் வீட்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது