Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தளபதியின் ‘மாஸ்டர்’ டீசர் அறிவிப்பு: குஷியில் ரசிகர்கள்!

Advertiesment
விஜய்
, வியாழன், 12 நவம்பர் 2020 (12:20 IST)
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் தீபாவளி விருந்தாக இந்த படத்தின் டீஸர் வெளியாகும் என்று கூறப்பட்டது
 
இதுகுறித்து திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் வெளியாகும் என்று வீடியோ ஒன்றின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது
 
இந்த அறிவிப்பு காரணமாக தளபதி விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். இந்த  டீசர் இன்று மாலை சமூகவலைதளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை: வைரமுத்து கண்டனம்!