Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாஸ்டர் படம் அமேசானில் ரிலீஸா...? புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!

Advertiesment
Master movie released
, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (15:38 IST)
சூர்யாவின் இந்த முடிவை அடுத்து வேறு சில முக்கிய நடிகர்களும் ஓடிடி தளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக திரையரங்குகளில் மட்டும் தான் ரிலீஸாகும் என்று பிடிவாதமாக இருக்கும் மாஸ்டர் திரைப்படம் தற்போது தனது முடிவில் இருந்து பின்வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் சூரரைபொற்று படத்திற்கு ரூபாய் 60 கோடி கொடுத்த அமேசான் நிறுவனம் ’மாஸ்டர்’ படத்திற்கு 100 கோடி வரை கொடுக்க முன் வந்ததாகவும் இதனை அடுத்து ’மாஸ்டர்’ தயாரிப்பாளர் ஓடிடி பக்கம் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

அமேசான் ஓடிடி தளம் மூலம் கிடைக்கும் 100 கோடி, சாட்டிலைட் விற்பனை, வெளிநாட்டு உரிமை விற்பனை, ஹிந்தி டப்பிங் உரிமை என அனைத்தையும் சேர்த்தால் ரூபாய் 200 கோடி வரை வர வாய்ப்பிருப்பதாகவும் இந்த கொரோனா நேரத்தில் இதை விட்டால் வேறு வழியில்லை என்றும் ’மாஸ்டர்’ தயாரிப்பாளர் யோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

மாஸ்டர்  திரைப்படத்தை தியேட்டரில் காண்பதற்கு விஜய் ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதாகவும், கொரொனா காலம் எத்தனை நாட்கள் நீண்டாளும் மாஸ்டர் திரைப்படம்  தியேட்டரில் தான் வெளியாகும் என பல்வேறு தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று சமூக வலைதளங்கில் ஒரு போஸ்டர் வெளியாகிறது. அதில், நவம்பர் 14ஆம் தேதி அமேசான் பிரைமில், மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

இந்த புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டோலி நேக்கு ஒரு டவுட்... காட்டுறதுக்கு எதுக்கு கட்டணும்? பாப்பாவ வருத்த பட வைத்த ஃபேன்ஸ்!