Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓடிடியில் ரிலிஸாகும் சூரரை போற்று – எவ்வளவு தொகைக்கு விலைபோனது?

ஓடிடியில் ரிலிஸாகும் சூரரை போற்று – எவ்வளவு தொகைக்கு விலைபோனது?
, சனி, 22 ஆகஸ்ட் 2020 (16:41 IST)
நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள நிலையில் எவ்வளவு தொகைக்கு விலை போயிருக்கலாம் என்ற கணிப்புகள் எழ ஆரம்பித்துள்ளன.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரக்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார். 

ஆனால், சூர்யாவின் முடிவால் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதோடு திரைப்பட தொழிலை நம்பியுள்ள பலரும் பாதிக்கப்படுவார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டிருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

வழக்கமாக சூர்யாவின் படங்களின் திரையரங்க விநியோக உரிமை 50 முதல் 60 கோடி ரூபாய்க்கு விற்கப்படும். மேலும் தெலுங்கு மற்றும் இதர மொழிகளில் டப்பிங் என 20 கோடி ரூபாய் வரை போகும். அதனால் ஓடிடியில் சூர்யா தனது இந்த மார்க்கெட்டை குறிவைத்து 70 முதல் 85 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவர் மட்டும் இருந்தால் இந்தியா உலகக்கோப்பையை வென்றிருக்கும் – ரெய்னா சொல்லும் வீரர் யார்?