Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருதநாயகம், சபாஷ் நாயுடு மீண்டும் வருமா?... கமல் சொன்ன பதிலால் ரசிகர்கள் அதிருப்தி!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (14:35 IST)
விக்ரம் வெற்றி சந்திப்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து சமீபத்தில் வெளியான படம் விக்ரம். இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் சில நிமிடங்கள் மட்டும் தோன்றினார். இந்த படத்தில் லோகேஷின் முந்தைய படமான கைதியின் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த படம் பெறும் வெற்றி பெற்றுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள கமல்ஹாசன் படக்குழுவினருக்கு பல்வேறு பரிசுகளை வழங்கி பாராட்டி வருகிறார். இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் லோகேஷ் மற்றும் கமல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் “மருதநாயகம் மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் உயிர்ப்பெறுமா?” என்று கேட்டபோது, “பாக்கணும், அந்த படங்களோடு நான் நீண்ட நாட்கள் வாழ்ந்துவிட்டதால், எனக்கு இப்போது அவற்றின் மீது ஆர்வமின்மை ஏற்பட்டுவிட்டது” என்று கூறியுள்ளார். இதனால் அந்த படங்கள் மீண்டும் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை சூசகமாக கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனது போலி ஆபாச வீடியோவை டவுன்லோட் செய்தால்…? - நடிகை கிரண் எச்சரிக்கை!

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments