சென்சார் ஆனது ‘பைசன்’ திரைப்படம்… ரன்னிங் டைம் விவரம்!

vinoth
வியாழன், 9 அக்டோபர் 2025 (08:49 IST)
நடிகர் விக்ரம்மின் மகனான துருவ் விக்ரம் ‘அர்ஜுன் ரெட்டி’யின் ரீமேக் படமான ஆதித்யா வர்மா படம் மூலமாக் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘மகான்’ திரைப்படத்தில் நடித்தார். அதையடுத்து மூன்றாவது படமாக மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபது, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது. படத்தில் இருந்து வெளியானப் பாடல்கள் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

இந்நிலையில் இந்த படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதே போல படத்தின் ‘ஓடும் நேரம்’ 2 மணிநேரம் 48 நிமிடம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிசம்பரில் தொடங்கும் தனுஷ்- ராஜ்குமார் பெரியசாமி திரைப்படம்!

கவின் –ஆண்ட்ரியாவின் ‘மாஸ்க்’ முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான விவரம்!

அடுத்த படத்தில் ஹீரோவாக அரிதாரம் பூசுகிறாரா ஜேசன் சஞ்சய்?

விஜய்க்கு சொன்ன கதையைதான் ரஜினிக்காக பட்டி டிங்கரிங் பார்க்கிறாரா ஆர் ஜே பாலாஜி?

வாட்ஸ் ஆப்பில் மோசடி… செல்ஃபோன் எண்ணைப் பகிர்ந்த உஷாராக்கிய ஸ்ரேயா!

அடுத்த கட்டுரையில்
Show comments