தமிழில் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் லோகேஷ் கனகராஜ். கைதி, விக்ரம் மூலமாக இவர் உருவாக்கியுள்ள லோக்கிவெர்ஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைகிறார். இந்த படத்துக்கு லியோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் முக்கியமான காட்சிகளை படமாக்கிவிட்டு இப்போது சென்னையில் ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்த படத்தில் லோகேஷின் விருப்ப நடிகரான மன்சூர் அலிகான் நடிக்கிறார். ஆனால் இதுவரையில் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாத அவர் இப்போதுதான் முதல் முறையாக ஷுட்டிங்கில் சமீபத்தில் இணைந்துள்ளாராம். கிட்டத்தட்ட ஒரு மாதம் அவர் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.