மஞ்சு வாரியர் அஜித் 61 படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அது பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்நிலையில் இந்த படத்தில் அசுரன் பட நடிகை மஞ்சி வாரியர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த தகவலை தற்போது மஞ்சு வாரியர் உறுதி செய்துள்ளார். இது சம்மந்தமாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மஞ்சு வாரியர் அஜித் 61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.