Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை வருடங்கள் நீடிப்பதே அதிர்ஷ்டம்தான்… மணிரத்னம் பேட்டி!

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (11:13 IST)
இயக்குனர் மணிரத்னம் தான் இத்தனை வருடங்கள் சினிமாவில் நீடிப்பதே அதிர்ஷ்டம்தான் என்க் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

இந்நிலையில் நவரசா ப்ரமோஷனில் இப்போது மணிரத்னம் ஈடுபட்டு வரும் அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் ‘நான் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் நீடிப்பதே என்னுடைய அதிர்ஷ்டம்தான். குரசோவா அவரின் கடைசி நாள் வரை படம் இயக்கினார். கிளிண்ட் ஈஸ்ட்வுட் இப்போதுவரை படம் இயக்குகிறார். இந்தியாவிலும் இதுபோல பல மாஸ்டர்கள் இருந்துள்ளனர். எவ்வளவு நாள் தொடரவேண்டும் என்பது நம் விருப்பத்தைப் பொறுத்துதான்.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments