Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மணிரத்னம் இயக்க ஆசைப்பட்ட நாவல்… ஆனால் முந்திக்கொண்ட வெற்றிமாறன்!

மணிரத்னம் இயக்க ஆசைப்பட்ட நாவல்… ஆனால் முந்திக்கொண்ட வெற்றிமாறன்!
, புதன், 26 ஏப்ரல் 2023 (11:48 IST)
தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் அசுரன். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்த அசுரன்  திரைப்படம் இப்போது ஆண்டு இறுதியில் மற்றொரு சாதனையையும் செய்துள்ளது. இந்த படம் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவலான வெக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது.

இந்த படம் தென்னிந்தியாவின் மற்ற மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் நாடு தாண்டி முதல் முறையாக சீனாவின் மாண்டரின் மொழியிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த படம் வெளியான போது இயக்குனர் வெற்றிமாறன் அளித்த ஒரு நேர்காணலில் “இந்த படத்தை இயக்குனர் மணிரத்னமும் இயக்க ஆசைப்பட்டு மூன்று வடிவத்தில் திரைக்கதை எழுதி வைத்திருந்திருக்கிறார். ஆனால் நான் இயக்கப் போகிறேன் என்றவுடன் எனக்காக விட்டுக்கொடுத்தார்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் இவானாவின் போட்டோஷூட்!