தமிழ் சினிமாவில் பின்னணிக் குரல் கலைஞர், எழுத்தாளர், நடிகர் மற்றும் இயக்குனர் என பல துறைகளில் செயல்பட்டு வந்த மணிகண்டனை கதாநாயகனாக அடையாளப்படுத்திய படம் என்றால் அது குட்னைட் படம்தான். அந்த படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்று அனைவரையும் கவர்ந்தது.
ஜெய்பீம், குட்னைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகராக உருவாகி வருகிறார் மணிகண்டன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் 12 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருகிறார் மணிகண்டன்.
இந்நிலையில் அவர் அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் கார்த்திகேயன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படம்தான் வடசென்னை 2 என சமூகவலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த கதைக்கும் வடசென்னை 2க்கும் எந்த சம்மந்தமும் இல்லை என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.