Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிறப்பான சம்பவம்… மண்டேலா திரைப்படம்

Advertiesment
தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிறப்பான சம்பவம்… மண்டேலா திரைப்படம்
, வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (10:24 IST)
யோகி பாபு நடித்துள்ள மண்டேலா படத்தின் சிறப்புக் காட்சி நேற்று திரையிடப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் புதிதாக ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மண்டேலா எனும் புதிய படத்தைத் தயாரித்துள்ளார். இந்த படத்துக்கான பைனான்ஸை ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனர் சசிகாந்த் செய்துள்ளார். இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். பிரதானக் கதாபாத்திரமான மண்டேலா பாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ள இந்த திரைப்படம் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ஒரு இந்நாட்டு மன்னன் என்ற சிறுகதையை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் நான்கு நாட்களில் தமிழகத்தில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் எப்படி சாதியை அடிப்படையாகவும், ஓட்டுக்கு பணம் எனும் இழிவான நிலையையும் கொண்டுள்ளது என்பதை பகடி செய்யும் விதமாகவும் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சிறப்புக் காட்சி நேற்று ஊடகத்தை சேர்ந்தவர்களுக்கு திரையிடப்பட்டது. அதைப் பார்த்த பலரும் பாராட்டி கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட்டின் அடுத்த நட்சத்திர ஜோடி திருமணம்!