Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சௌசௌவில் உள்ள வைட்டமின்கள் பற்றி தெரியுமா....?

சௌசௌவில் உள்ள வைட்டமின்கள் பற்றி  தெரியுமா....?
, வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (00:05 IST)
சௌசௌவை அன்றாட உணவில் பயன்படுத்தி வருபவர்களுக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது. சௌசௌ நீர்ச்சத்து அதிகமுள்ள காயாகும். ஆதலால் சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும். மேலும், சிறுநீர் சம்பந்தமான நோய்களிலிருந்தும் உடலை பாதுகாக்கும்.
 
உடல் வளம் பெற சௌசௌவை நாம் உண்ணும் உணவில் தவறாமல் சேர்த்து கொள்வது அவசியமாகும். இதில் உள்ள வைட்டமின்கள் உடலின் நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும்.
 
சௌசௌவானது நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தும். சௌசௌவில் உள்ள கால்சியமானது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. மேலும்  சௌசௌவில் உள்ள வைட்டமின் சி, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.
 
வயிறு சம்மந்தமான நோய்களை நீக்கி வயிற்றை சுத்தப்படுத்தும் சக்தி சௌசௌவிற்கு உண்டு. சௌசௌவானது உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைக்கும்.
 
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை சௌசௌவை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கும். சௌசௌவானது குடல் பாதையை சுத்தம் செய்து பெருங்குடல் மற்றும் சிறுகுடல் சம்மந்தமான நோய்களை நீக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பச்சை பட்டாணியில் என்ன வைட்டமின்கள் மிகுதியாக உள்ளது??