Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிளாஸ் படங்களுக்கு இடையில் ஒரு மாஸ் படம்… மம்மூட்டியின் ‘டர்போ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கிளாஸ் படங்களுக்கு இடையில் ஒரு மாஸ் படம்… மம்மூட்டியின் ‘டர்போ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

, செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (11:13 IST)
கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களன்களை தேடி நடித்து வருகிறார் மம்மூட்டி. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புழு, கண்ணூர் ஸ்குவாட் மற்றும் காதல் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன.

இதையடுத்து பிப்ரவரி மாதம் நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரித்த பிரமயுகம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமான படமாக அமைந்தது.

இதையடுத்து இப்போது மம்மூட்டி மீண்டும் ஒரு மாஸ் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கிறார். டர்போ என தலைப்பிடப்பட்டுள்ள அந்த படம் ஜூன் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மம்மூட்டியை வைத்து ஏற்கனவே பல ஆக்‌ஷன் படங்களை இயக்கிய வைசாக் இயக்குகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல ஓடிடியில் வெளியான ஜீவா நடித்த தெலுங்கு படமான யாத்ரா 2!