Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று வெளியாகிறது துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் டீசர்!

இன்று வெளியாகிறது துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் டீசர்!

vinoth

, வியாழன், 11 ஏப்ரல் 2024 (07:06 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷ், சம்யுக்தா மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸான திரைப்படம் வாத்தி. இந்த படத்தை தெலுங்கு இயக்குனரான வெங்கட் அட்லூரி இயக்கி இருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இந்த படம் வசூலில் குறைவைக்கவில்லை.

இதையடுத்து வெங்கட் இயக்கும் அடுத்த பேன் இந்தியா படமான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துள்ள நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு மாதங்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ஜெயம் ரவியின் ‘சைரன்’!