Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளியானது மம்மூட்டி – லிஜோ ஜோஸ் பெல்லிசெரி படத்தின் டீசர்!

வெளியானது மம்மூட்டி – லிஜோ ஜோஸ் பெல்லிசெரி படத்தின் டீசர்!
, சனி, 19 மார்ச் 2022 (16:30 IST)
லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அவர் அடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக மம்மூட்டி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு தமிழ் தலைப்பாக நண்பகல் நேரத்து மயக்கம் என வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீசர் இப்போது இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடிவாசல் பணிகளை தொடங்கிய வெற்றிமாறன்!