Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மொஹாலி மைதானத்தில் 3 ஆட்டநாயகன் விருது… ஜடேஜா செய்த சாதனை!

Advertiesment
மொஹாலி மைதானத்தில் 3 ஆட்டநாயகன் விருது… ஜடேஜா செய்த சாதனை!
, திங்கள், 7 மார்ச் 2022 (10:05 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்175 ரன்கள் மற்றும் 9 விக்கெட்கள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்றோடு முடிவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.  பேட்டிங்கில்  7 ஆவது வீரராகக் களமிறங்கிய அதிரடியாக விளையாடி175 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இதற்கு முன்னதாக இந்தியாவைச் சேர்ந்த கபில்தேவ் 7 ஆவது வீரராக களமிறங்கிய 169 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அந்த சாதனையை ஜடேஜா முறியடித்தார்.

பேட்டிங்கில் கலக்கியது போலவே பவுலிங்கிலும் 9 விக்கெட்கள் வீழ்த்தி கலக்கினார். முதல்  இன்னிங்சில் இலங்கை அணியின் 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது போட்டி நடந்த மொஹாலி மைதானத்தில் அவர் பெறும் மூன்றாவது ஆட்டநாயகன் விருதாகும். இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 8 விக்கெட்கள் வீழ்த்தி, 55 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். அதுபோலவே 2016 ஆம் ஆண்டு நடந்த போட்டியிலும் 4 விக்கெட்கள் மற்றும் 90 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் லீக் போட்டிகளின் முழு அட்டவணை!