ஷங்கர் மகனுக்கு கதாநாயகி ஆகும் மமிதா பைஜு..!

vinoth
சனி, 22 மார்ச் 2025 (16:09 IST)
தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக  பல படங்களில் நடித்த பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தைய படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை.

அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதில் எந்த படங்களும் பெரிதாக அவருக்கு திருப்புமுனையாக அமையவில்லை. இதனால் அவர் நடிப்பில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸான ஜாலியோ ஜிம்கானா படம் வந்த தடம் கூட தெரியாமல் போனது.

இந்நிலையில் இப்போது பிரபுதேவா மீண்டும் இயக்குனர் அவதாரத்தை எடுக்க உள்ளாராம். அவர் இயக்கும் புதிய படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் நடிகராக அறிமுகமாகவுள்ளாராம். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments