’மாமன்னன்’ இசை வெளியீடு: கமல் கலந்து கொள்வார் என அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (15:21 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்து கொள்வார் என்றும் இந்த விழா ஆறு மணிக்கு தொடங்கும் என்று அறிவித்துள்ளார் 
 
ஏற்கனவே கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் நெருக்கமாக இருக்கும் நிலையில் உதயநிதியின் படத்தின் இசை விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய அந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments