Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'லிப் கிஸ்': காதலர்களின் இந்த முத்தம் அன்பின் வெளிப்பாடா? பாலுணர்வைத் தூண்டவா?

ex lovers
, செவ்வாய், 30 மே 2023 (21:19 IST)
உதடுகளில் முத்தமிடும் பழக்கம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொதுமக்களிடையே வெகு இயல்பாகக் காணப்படும் பழக்கமாக உள்ளது. ஆனால் உண்மையில், இந்த பழக்கம் நம்மிடையே எப்போதுமே இருந்து வந்த பழக்கமா, அல்லது அண்மைக்காலத்தில் தோன்றிய பழக்கமா என்பது குறித்த தெளிவான விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.
 
முத்தமிடுவதற்கான காரணங்கள் நாம் நினைப்பது போல் எளிதானவை கிடையாது. அவை மிகவும் சிக்கலானவை.
 
இந்தப்பழக்கம் இந்தியாவில் கிமு 1500க்கு முன் தோன்றியிருக்கலாம் என இதுவரை நம்பப்பட்டு வருகிறது. ஆனால், சயின்ஸ் இதழில் அண்மையில் வெளியான ஒரு கட்டுரையில், இந்தக் கருத்துக்கு எதிரான ஏராளமான உண்மைகள் நமக்குக் கிடைத்துள்ளன.
 
இந்த கட்டுரையின் படி, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தற்போதைய ஈராக் மற்றும் சிரியாவில் இருந்த பண்டைய மெசபடோமியாவில் உதடுகளில் முத்தமிடும் பழக்கம் தோன்றியிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன்படி, பாலுணர்வை அதிகரிக்கும் விதமாக இது போன்ற உதடுகளில் முத்தமிடும் பழக்கம், இதுவரை நாம் நினைத்து வந்த காலத்துக்கும் 1000 ஆண்டுகள் பழமையானது.
 
ஒருவர் நமக்கு சரியான துணையாக இருப்பாரா என்பதை அறிவதில் உதடுகளில் முத்தமிடுதல் பெரும் பங்காற்றுவதாக பரிணாம மானுடவியலாளர்கள் கருதுகின்றனர். உதடுகளில் முத்தமிட்டுக்கொள்ளும் போது, உமிழ்நீர் மற்றும் மூச்சுக் காற்று மூலம் பல சமிக்ஞைகள் பகிரப்படுவதாகவும், இதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் ஏற்ற துணைகளா என்பது அறியப்படுகிறது என்றும் அவர்கள் விளக்குகின்றனர்.
 
இரண்டு பேருக்கு இடையே மிகவும் நெருக்கமான அன்புப் பிணைப்பை உருவாக்கவும், பாலுணர்வுகளைத் தூண்டவுமே உதடுகளில் முத்தமிடும் பழக்கம் உதவுவதாக மற்றுமொரு காரணம் சொல்லப்படுகிறது.
 
மனிதப் படைப்புடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள சிம்பன்சி குரங்குகளிடமும் இது போல் உதடுகளில் முத்தமிடும் பழக்கம் காணப்படுகிறது. இந்த உண்மை, உதடுகளில் முத்தமிடும் பழக்கம், மனிதர்களிடையே தோன்றிய காலத்துக்கும் முற்பட்டது என்ற உண்மையை நமக்குப் புரியவைக்கிறது.
 
பண்டைய மெசபடோமியாவில் வாழ்ந்த மக்கள் எழுத்துகளைக் கண்டுபிடித்த காலத்திலேயே எகிப்தில் வாழ்ந்த மக்களும் எழுதக் கற்றுக்கொண்டிருக்கலாம்.
 
மிகப்பழமையான மெசபடோனிய எழுத்துப் பிரதிகள், தற்போதைய ஈராக்கின் தென்பகுதியில் உள்ள உருக் நகரில் கிமு 3200ல் கண்டுபிடிக்கப்பட்டன.
 
இந்த எழுத்து முறை க்யூனிஃபார்ம் என அழைக்கப்படுகிறது. இவை ஈரமான களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய மாத்திரை போன்ற கட்டிகளில் முக்கோண வடிவில் பொறிக்கப்பட்டன. உண்மையில் இந்த எழுத்துகள், பிற எந்த மொழியுடனும் தொடர்பில்லாத சுமேரிய மொழியில் சில தகவல்களை வெளிப்படுத்தும் பிரதிகளாக உருவாக்கப்பட்டன.
 
நமக்குத் தெரிந்த ஆரம்ப கால மொழியில் எழுதப்பட்ட நூல்கள் நிர்வாக நடைமுறைகள் மற்றும் பல்வேறு அதிகார நிலைகளைக் குறிக்கும் நூல்களாக இருக்கும் நிலையில், பின்னர் படிப்படியாக பொதுமக்கள் அந்த மொழியை மற்ற தகவல்கள் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தவும் பயன்படுத்திக்கொண்டனர். அதற்கான எழுத்துமுறைகளும் உருவாகின.
 
கிமு மூன்றாம் மில்லினியத்தின் முதல் பாதியில், மத நம்பிக்கை சார்ந்த கதைகள் மற்றும் மந்திரங்களை எழுதுவதற்கு மட்டுமே இந்த மொழி எழுத்துககள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதன் பின் பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தகவல்களைத் தெரிவிக்கவும் இந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன.
 
இவற்றில் ஒரு சில மிகப்பழமையான எழுத்துகளில், உதடுகளில் முத்தமிடுவது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கிமு 2500 முதல் ஏராளமான கதைகளில் கடவுள்கள் இது போல் முத்தமிட்டுக் கொண்ட தகவல்களும் கிடைக்கின்றன.
 
முத்தமிடுவது குறித்த முதல் ஆதாரம்
 
இது போன்று நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான மெசபடோமிய களிமண் உருவத்தில் க்யூனிஃபார்ம் எழுத்துமுறையில் எழுதப்பட்ட பிரதி ஒன்றில் இரண்டு தெய்வங்கள் உதடுகளில் முத்தமிட்டது மற்றும் பாலுறவில் ஈடுபட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அது:
 
'...நின்ஹர்சாக் என்ற பெண் தெய்வத்துடன் அந்த கடவுள் உடலுறவு வைத்துக்கொண்டார். அவர் அந்த பெண் தெய்வத்தை முத்தமிட்டார். அந்த பெண் தெய்வத்தின் வயிற்றில் 7 இரட்டையர்களின் விந்தணு மூலம் ஒரு கருவை அவர் உருவாக்கினார்.'
 
பிற்காலத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக கிடைத்த எழுத்துப் பிரதி ஒன்றில், முத்தமிடுவது என்பது பாலுறவைத் தூண்டுதல், குடும்ப உறவுகளை வெளிப்படுத்துதல், நட்புணர்வை வெளிப்படுத்துதல் போன்ற பல்வேறு நிலைகளில் பொதுமக்களிடையே சர்வசாதாரணமாக மூன்றாவது மில்லீனிய காலத்தின் இறுதியில் இருந்தே நடைமுறையில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
 
பொதுவெளியில் ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக்கொள்வது முகம் சுளிக்கும் செயலே என்றாலும், திருமணமான ஜோடிகள் முத்தமிட்டுக்கொண்ட நிகழ்வுகள் பழங்காலத்திலேயே நிகழ்ந்துள்ளன.
 
தரமான நடத்தையை உறுதி செய்ய ஒவ்வொரு சமூகத்திலும் சில விதிகள் உள்ளன. இதே போன்ற விதிகள் பழங்காலத்திலும் பரவலாக இருந்துள்ளன.
 
முத்தமிடும் பழக்கம் ஒற்றை இடத்திலிருந்து தோன்றியதா?
 
இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உதடுகளில் முத்தமிடும் பழக்கம் பழங்காலத்திலேயே நடைமுறையில் இருந்தது என்பதை பல ஆதாரங்கள் காட்டுகின்றன.
 
மனிதர்களிடையே முத்தமிடும் பழக்கம் எப்போது தோன்றியது என்பது குறித்து ஏற்கெனவே நாம் அறிந்திருந்தவற்றை இந்த ஆதாரங்கள் மாற்றியமைத்துள்ளன.
 
கிமு 1500ல் இந்தியாவில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி ஒன்றில், முத்தமிடும் பழக்கம் இந்தியாவில் இருந்து ஒரு கலாச்சாரப் பகிர்வாக மேற்குலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மெசபடோமியாவில் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி, இந்தத் தகவலை நாம் மறுக்கமுடியும்.
 
பாலுணர்வைத் தூண்டும் முத்தம் குறித்து நமக்குக் கிடைத்துள்ள தகவல்களை ஆராய்ந்தால் அது பல சமூகங்களில் பல நிலைகளில் தோன்றியிருக்கலாம் என்றே தெரியவருகிறது.
 
அதே நேரம் உதடுகளில் முத்தமிடும் பழக்கம் முதன்முதலாக எங்கு தோன்றியது என ஒரே ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க விரும்பினால், அது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, வரலாற்றுக்கு முந்தைய காலங்களை ஆராய்ந்தால் மட்டுமே சாத்தியப்படும்.
 
முத்தமிடுவது குறித்த வரலாறு குழப்பமானது
தற்போதைய மானுடவியல் ஆய்வு ஒன்றின் படி, பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் முத்தமிடுவது உலகளாவியது அல்ல என்பது புலனாகிறது. இருப்பினும் சிக்கலான படிநிலைகளைக் கொண்டிருந்த சமூகங்களிலும் இது போன்ற முத்தமிடும் பழக்கம் இருந்ததை பழங்காலத்தில் எழுதப்பட்ட பிரதி ஒன்று நமக்கும் காட்டுகிறது.
 
இந்நிலையில், தொடக்க காலத்தில் எழுதவே தெரிந்திருக்காத சமூகங்களில் இதே போன்று முத்தமிடும் பழக்கம் இருந்ததா என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
 
சில சமூகங்களில் பாலுணர்வைத் தூண்டும் வகையில் முத்தமிடும் பழக்கங்கள் இல்லாவிட்டாலும், கலாச்சார தொடர்புகள் முழுவதும் அந்தப் பழக்கம் பழங்காலத்தில் உலகம் முழுவதும் பரவலாக இருந்திருக்கவேண்டும் என நாம் வாதிட முடியும்.
 
எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆராய்ச்சிகளின் படி, உதடுகளில் முத்தமிடும் பழக்கம் உலகளாவியது அல்ல எனக் காட்டினாலும், ஏன் அனைத்து சமூகங்களிலும் இந்த முத்தமிடும் பழக்கம் இல்லாமல் போனது என்பது உள்ளிட்ட ஆர்வத்தைத் தூண்டக்கூடிய கேள்விகள் எழும்.
 
நமக்கும் ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால், முத்தமிடும் கலாச்சாரமும், வரலாறும் ஒரு சிக்கலான விஷயமாக இருக்கும் நிலையில், இது குறித்து இன்னும் பல புதிய தகவல்களைத் தேட வேண்டியிருக்கிறது என்பதே.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவியுடன் வந்து பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பெற்ற வளர்ப்பு நாய்!