மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தனது மனைவியுடன் 2 நாள் பயணமாக இந்தியா வர இருக்கிறார். மலேசியாவில் இருந்து நேராக சென்னை வரும் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க விரும்புகிறார்.
உலகம் முழுக்க ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளமாக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் ரஜினிகாந்துக்கு பயங்கரமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் `கபாலி' படத்தில் ரஜினி மலேசியா டானாக வரும் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வர இருக்கும் ரஸாக், பிரதமர் மோடியை சந்திக்கும் முன், சூப்பர் ஸ்டாரை சந்திக்க விரும்புகிறாராம். அதுமட்டுமல்லாமல் மலேசியாவில் உள்ள மலாக்கா நகரின் சுற்றுலாத் தூதராக ரஜினியை நியமிக்க அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.