Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலையாள சினிமாவின் ஆல்டைம் ஹிட் புலிமுருகன் வசூலை முறியடித்த ‘2018’

மலையாள சினிமாவின் ஆல்டைம் ஹிட் புலிமுருகன் வசூலை முறியடித்த ‘2018’
, வியாழன், 25 மே 2023 (08:25 IST)
கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் மிகப்பெரிய அளவில் மழை பெய்து, வெள்ளத்தால் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு ஏராளமான பொருட்சேதங்கள் மற்றும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. அதை மையமாக வைத்து 2018 என்ற படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கினார். இதில் டோவினோ தாமஸ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தனர்.

மே 5 ஆம் தேதி ரிலீஸான இந்த படம் கேரளாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ரிலீஸாகி 11 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை புலிமுருகன் மற்றும் லூசிபர் ஆகிய படங்களின் வசூல் சாதனையை தவிர மற்ற படங்களின் வசூல் சாதனை அனைத்தையும் முறியடித்து ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்போது வெளியாகி 18 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த படம் இதுவரை 140 கோடி ரூபாய் வசூலித்து மலையாள சினிமாவின் ஆல்டைம் ப்ளாக்பஸ்டர் புலிமுருகன் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.  புலிமுருகன் கேரளாவில் திரையரங்குகள் மூலமாக 137.5 கோடி ரூபாய் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயிலர் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்… மின்னல் வேகத்தில் ரஜினி!