Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’டெவில்’ படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் மாளவிகா நாயர்!

malavika nair
, திங்கள், 16 அக்டோபர் 2023 (13:34 IST)
நந்தமுரி கல்யாண் ராம் தனது திரைவாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே தனித்துவமான ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர்,



கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும்  வகையில் “டெவில்” எனப்  பெயரிடப்பட்ட இப்படம், பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் என்ற டேக்லைனுடன் வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் நவம்பர் 24, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. இந்த ஞாயிற்றுக்கிழமை, தயாரிப்பாளர்கள் இந்த படத்திலிருந்து சக்திவாய்ந்த அரசியல்வாதி வேடத்தில் நடிக்கும் கதாநாயகி மாளவிகா நாயரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக வெளியிட்டனர். இந்த படத்தில் மணிமேகலா எனும் கதாப்பாத்திரத்தில் மாளவிகா நாயர் நடிக்கிறார். இவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்  வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் அரசியல்வாதியாக தோன்றும் இவரது கதாப்பாத்திர பின்னணியில் மிகவும் கடினமான ஒரு ரகசியத்தைத் கண்டுபிடிக்கும் பிரிட்டிஷ் ரகசிய ஏஜென்டாக ரசிகர்களை வசீகரிக்கவுள்ளார்.

 மெகா ஹிட் படங்களை தந்த அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் “டெவில்”  படத்தை வழங்குகிறது.

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஸ்ரீகாந்த் விசாவின் திறமையான குழு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை  வடிவமைத்துள்ளது. இந்த ஸ்பை த்ரில்லர் படம் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சல்மான் கானின் 'டைகர் 3' பட டிரைலர் ரிலீஸ்...இணையதளத்தில் வைரல்