சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன் இது ஊரடங்கு நேரம் என்பதால் 24 மணி நேரமும் சோஷியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது பாத் ட்ரஸ் போன்ற உடையில் காற்றோற்றமாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் மிதந்தபடி போட்டோ போட்டிருந்தார். எனவே தற்ப்போது இணையவாசி ஒருவர், " குளிச்சுட்டு டவலோட வருவீங்கன்னு பார்த்தேன். ஆனால், இப்படி வருவீங்கன்னு எதிர்பார்கல " என்று கமெண்ட் செய்து பரிதவித்துள்ளார்.