சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ரஜினி படத்தில் இத்தனை பிரபலங்கள் நடிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும் என கருதப்படுகிறது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், மகேந்திரன், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ஆகியோர் 'பேட்ட' படத்தில் நடித்து வருகின்றனர்.
 
									
										
			        							
								
																	இந்த நிலையில் தற்போது மலையாளம், இந்தி, கன்னட படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன் என்பவர் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ளார். இவர் பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் மோகனன் என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.