Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமந்தாவைப் பாராட்டிய மகேஷ் பாபு

சமந்தாவைப் பாராட்டிய மகேஷ் பாபு
, சனி, 7 ஏப்ரல் 2018 (15:53 IST)
சமந்தா நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியிருக்கிறார் மகேஷ் பாபு.



ராம் சரண், சமந்தா நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘ரங்கஸ்தலம்’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெகபதி பாபு, ஆதி பின்னிசெட்டி, பிரகாஷ் ராஜ், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்த அனைவருமே படத்தையும், அதில் நடித்தவர்களையும் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில், தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபுவும் பாராட்டியுள்ளார்.

“மைத்ரி தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இன்னுமொரு அற்புதமான படம் வெளியாகியிருக்கிறது. ராம் சரண், சமந்தா இருவருக்குமே அவர்களுடைய சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இது இருக்கும். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூடுபிடிக்கும் ஸ்ரீலீக்ஸ்; நடிகை அரைநிர்வாண போராட்டம்