திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், க்யூப் நிறுவனத்திற்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 1ஆம் தேதியில் இருந்து வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படங்கள் ஏதும் ரீலிசாகாத நிலையில், சமந்தாவின் படம் ஒன்று வசூலில் சாதனை படத்துள்ளது.
தமிழகத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக சினிமா ஸ்டிரைக் தொடர்ந்து வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை குறிவைத்து, ஏராளமான படங்கள் ரிலீஸ் ஆகும். ஆனால், தற்போது புதிய படங்கள் ஏதும் வெளியாகாத காரணத்தால் தியேட்டர்களில் கூட்டம் இல்லை. சில ஆங்கில படங்கள், பழைய தமிழ் படங்கள் என திரையிடப்பட்டுல்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு தெலுங்கு படங்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒன்று ‘பாகி 2’ மற்றொன்று, ராம்சரண் தேஜா-சமந்தா நடித்த ‘ரங்கஸ்தலம்’. சமந்தா நடித்த இந்த படம் சென்னையில் மட்டும் 3 நாட்களில் ரூ.70 லட்சம் வசூலித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் ரூ.1 கோடி வசூலித்து இருக்கிறது. ஈஸ்டர் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக இந்த வசூல் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
ஒரு நேரடி தெலுங்கு படத்துக்கு இது மிகப்பெரிய வசூல் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சமந்தா நடித்த ரங்கஸ்தலம்’ தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆந்திரா- தெலுங்கானாவிலும் சேர்த்து மொத்தம் ரூ.50 கோடி வசூலை குவித்துள்ளது.