சமீபத்தில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வெளியான மகாதவதார் நரசிம்மா படம் 150 கோடி ரூபாயை தாண்டி வசூலித்து வருகிறது.
பொதுவாக இந்தியாவில் தயாரிக்கப்படும் அனிமேஷன் படங்கள் திரையரங்குகளில் வெற்றிபெறாமல் போவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கோச்சடையான் தொடங்கி ஆதிபுருஷ் வரை பல படங்கள் பார்வையாளர்களை ஈர்க்க தவறிய நிலையில், எந்த வித ஸ்டார்களும் இல்லாத மகாவதார் நரசிம்மா பெரும் ஹிட் அடித்துள்ளது.
அஷ்வின் குமார் இயக்கத்தில் முழு அனிமேஷன் படமாக வெளியான இந்த படத்திற்கு ஆரம்பத்தில் குறைவான தியேட்டர்களே ஒதுக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அமோக வரவேற்பை அளித்தனர். நேற்று நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தை பார்த்து மிகவும் பாராட்டியிருந்தார்.
நாளுக்கு நாள் மகாவதார் நரசிம்மா படத்திற்கான வரவேற்பு அதிகரித்ததால் தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை மகாவதார் நரசிம்மா படம் 150 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. இந்த வசூல் வேட்டை இன்னும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K