Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமாயணம், மஹாபாரதம் எடுத்தது போதும்..! தசவதாரத்தை கையில் எடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனம்!

Advertiesment
Mahavatar Narasimha

Prasanth Karthick

, ஞாயிறு, 17 நவம்பர் 2024 (10:27 IST)

கேஜிஎஃப், சலார் உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது கடவுள் அவதாரப் படங்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.

 

 

கேஜிஎஃப் வெற்றியை தொடர்ந்து ஹொம்பாலே நிறுவனம் தயாரித்து வெளியிட்ட காந்தாரா, சலார் உள்ளிட்ட படங்கள் பேன் இந்தியா அளவில் பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றுள்ளன. இந்நிலையில் அதை தொடர்ந்து கடவுளர் படங்களை Kleem Productions தயாரிக்க ஹொம்பாலே வெளியிடுகிறது.

 

அதன்படி மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் குறித்தும் தனித்தனி படங்களை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு அதை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதில் முதலாவது படமாக நரசிம்ம அவதாரத்தை வைத்து ‘மகா அவதார் நரசிம்மா’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை அஷ்வின் குமார் எழுதி இயக்கியுள்ளார், சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

 

இந்த படத்தின் நடிகர், நடிகையர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கையில் வாளுடன் இரணியகசிபு நிற்க, அவரை விட பெரும் தோற்றத்தில் நரசிம்ம அவதாரம் நிற்பதாக காட்டப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் 3டியில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அடுத்தடுத்து மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் படமாக வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வீட்டில் இன்று எலிமினேஷன் ஆகும் போட்டியாளர் இவரா?