Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி –பூரி ஜெகன்னாத் படத்துக்கு இசையமைக்கும் வாரிசு இசையமைப்பாளர்!

vinoth
திங்கள், 9 ஜூன் 2025 (10:25 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பூரி ஜெகன்னாத். அவரின் பல ஹிட் படங்கள் தமிழிலேயே ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. எம் குமரன் படமெல்லாம் அவர் இயக்கிய படத்தின் ரீமேக்தான். ஆனால் தற்போது அவர் ஒரு பின்னடைவில் உள்ளார்.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவான லைகா திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக வந்தது. ஆனால் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக அவரின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவானது. இந்நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு பேன் இந்தியா படத்தை இயக்கி, தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கை ஜூனில் அவர் தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்துக்கு இளம் இசையமைப்பாளர் மஹதி ஸ்வர சாஹர் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த இசையமைப்பாளர் மணிஷர்மாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments