Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாரா மீது மத்திய பிரதேச போலீஸார் வழக்கு பதிவு?

Advertiesment
annapoorani -nayanthara

Sinoj

, வெள்ளி, 12 ஜனவரி 2024 (13:46 IST)
அன்னப்பூரணி பட விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா மீது மத்திய பிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா.  இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து நடித்த படம் அன்னப்பூரணி.

இந்த படத்தில், இவர்களுடன் இணைந்து,  சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கியிருந்தார். தமன் இசையமப்பில் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஜீ ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில்,  நயன்தாரா நடிப்பில் உருவான அன்னப்பூரணி கடந்தாண்டு  டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.

இப்படம் திரையங்கில் வெற்றிகரமாக ஓடியது. அதன்பின்னர், இப்படத்தை வாங்கியிருந்த நெட்பிளிக்ஸில் ஓடிடி தளத்திலும் வெளியானது.

ஆனால், இப்படத்தில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. அதாவது, ராமர் அசைவம் சாப்பிட்டதாக இப்படத்தில் வசனம் இருந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து  நீக்கப்பட்டது.

இந்த நிலையில்,  அன்னப்பூரணி படம் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக, மத்திய பிரேதேச மாநிலத்தின் ஜபல்பூர் போலீஸார்  நடிகை நயன்தாரா  உள்ளிட்ட படக்குழுவினர் மீது  வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாஸின் 'கல்கி ஏடி 2898' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு