இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகையாக 90 களில் உலாவந்தவர் மாதுரி தீக்ஷித்.
மாதுரி தீக்ஷித் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்த போது எந்த ஒரு பிராந்திய மொழிப் படத்திலும் நடிக்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்தார். இயக்குனர் ஷங்கரே காதலன் மற்றும் இந்தியன் ஆகிய படங்களில் நடிக்கக் கேட்ட போதும் மறுத்துவிட்டார்.
ஆனால் அவர் ஒரே ஒரு தமிழ் படத்தில் நடிக்க சம்மதித்தார். அதுவும் ஒரு அறிமுக இயக்குனர் படத்தில். ஷங்கரிடம் உதவியாளராக இருந்த காந்தி கிருஷ்ணா தனது முதல்படமாக என்ஜினியர் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தின் கதையைக் கேட்டு அரவிந்த் சாமிக்கு ஜோடியாக அவர் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்பு பாதியிலேயே கைவிடப்பட்டதால் அந்த படம் இன்று வரை ரிலீஸாக வில்லை.